மத்திய பட்ஜெட் கூட்டத்தில் தங்கம் விலை மீதாக உள்ள சுங்கவரியை 6 சதவீதம் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில்,தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,200 சரிந்து ரூ.6550-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இதனையடுத்து,நேற்று ஜூலை 23 ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.275 குறைந்தது.
இந்த சூழலில் இன்று மீண்டும் அதிரடியாக தங்கத்தின் விலை இன்றும் குறைந்துள்ளது.
அதன்படி,22 காரட் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6,490-க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.51,920-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர்.
இதை போன்று, 18 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5316- க்கும்,ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.42,528-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர்.
அதை தொடர்ந்து,வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம்வெள்ளியின் விலை ரூ.92-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.92,000-க்கும் விற்பனை விற்பனை செய்யப்டுகிறது.