முருகன் வேலில் சொருகப்பட்ட 9 எலுமிச்சை பழங்கள் 2 லட்சத்து 36 ஆயிரத்து 100 ரூபாய் விலைக்கு ஏலம் போன சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது .
விழுப்புரம் மாவட்டதில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் அருகே ஒட்டனந்தல் கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் பிரசித்த பெற்ற ரத்தினவேல் முருகன் கோவில் இருந்துவருகிறது.
இந்த கோவிலின் கருவறையில் ஒரு வேல் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. இக்கோவிலில் வருட வருட பங்குனி உத்திர திருவிழா மிக பிரம்மாண்டமாக கொண்ட்டாடப்பட்டு வருகிறது.
அதுபோல் இந்த வருடமும் கடந்த 15 ஆம் தேதியில் கொடியேற்றி பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது. அதைத்தொடர்ந்து நேற்று (25/3/24) விழாவின் இறுதிநாளான பங்குனி உத்திரம் திருவிழா கொண்டப்பட்டது.இந்த விழாவில் கடந்த 9 நாளாக கருவறையில் வைத்து பூஜை செய்த எலுமிச்சை பழங்களை சேகரித்து இறுதிநாளில் நடத்தப்படும் இடும்பன் பூஜையில் ஏலம் விடப்படும்.
அதுமட்டுமின்றி,கோவிலில் வைக்கப்பட்ட எலுமிச்சை பழங்களை வாங்கி சென்றால் ”குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் எனவும், நீண்ட நாள் கல்யாணம் ஆகாதவர்களுக்கு கல்யாணம் ஆகும் என ஐதீகம் உண்டு ”.
எனவே, இந்த ஏலத்தில் கலந்துகொள்ள பல மாவட்டத்தில் இருந்து ஏராளமான பகதர்கள் வந்துள்ளனர். ஏலத்தின் போது முருகன் கோவிலின் தலைமை பூசாரி அணிகள் நிறைந்த காலனியின் மேல் நின்றவாறு ஏலத்தினை தொடங்குவார்.
அப்போது, குழந்தை பாக்கியம் தரக்கூடிய முதல் உற்சவ எலுமிச்சை பழம் 50,500 ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த எலுமிச்சை பழத்தை, தி.கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அருள்தாஸ் கனிமொழி தம்பதி ஏலம் எடுத்தனர்.எலுமிச்சை பழத்தை ஏலம் எடுத்தவர்கள் உடலில் தண்ணீரை ஊற்றுக் கொண்டு பூசாரி முன்பு மண்டியிட்டு புடவையின் முந்தானையில் எலுமிச்சை பழத்தினை பெற்றுக் கொண்டனர்.
இந்த பூஜையன் இறுதியாக இடும்பனுக்கு படைக்கப்பட்ட கருவாட்டுக் குழம்பு கலந்த சாதம், பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படும். இறுதியாக முருகன் வேலில் சொருகப்பட்ட 9 எலுமிச்சை பழங்கள் 2 லட்சத்து 36 ஆயிரத்து 100 ரூபாய் விலை போனது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு முகனை வழிபட்டு மகிழ்ந்து சென்றனர்.