காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.பி.ஜெயக்குமார் கடந்த மாதம் தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக காவல் நிலையத்தில் புகரித்த நிலையில் தற்போது கரைசுத்து புதூர் அருகே உள்ள தோட்டத்தில் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரான கே.பி.ஜெயக்குமாரை காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கடந்த 2 ஆம் தேதியில் 7.45 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்ற ஜெயக்குமார் இன்னும் வீடு திரும்பவில்லை எனவும் அந்த புகாரி கூறியுள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.பி.ஜெயக்குமார் கடந்த மாதம் தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்,ஜெயக்குமாரின் மகன் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையின் போது, கரைசுத்து புதூர் அருகே உள்ள தோட்டத்தில் ஜெயக்குமார் சடலமாக கிடப்பதாக தகவல் கிடைத்த நிலையில்,சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்று கே.பி.ஜெயக்குமாரின் சடலத்தை மீட்கப்பட்டுள்ளார்.
பின்னர் ,ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.
இதை தொடர்ந்து, நெல்லை மாவட்டத்தின் முக்கிய நிர்வாகியாக இருந்த ஜெயக்குமார் மர்மமான முறையில் சடலமாக கிடந்தது நெல்லை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .