பள்ளியின் கழிவறை சுவற்றில் இன்று காலையில் சாதியை இழிவுபடுத்தி எழுதியதாக புகார் எழுந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் பகுதியில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.
இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், பள்ளியின் கழிவறை சுவற்றில் இன்று காலையில் சாதியை இழிவுபடுத்தி எழுதியதாக புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில்,அந்த பள்ளியில் பயிலும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் இரண்டு மாணவர்களுக்கு லேசான ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தகவல் அறிந்து வள்ளியூர் டிஎஸ்பி யோகேஷ் குமார் தலைமையிலான போலீசார் பள்ளிக்கு வந்தனர்.
மேலும், இந்த தகராறு பற்றி பத்துக்கும் மேற்பட்ட மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனால்,வள்ளியூர் அரசு பள்ளி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.