நடிகர் பரத், நடிகைகள் ரம்யநம்பீசன், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் ‘தலைமைச் செயலகம்’ என்ற வெப் தொடரில் நடித்து இருக்கிறார்கள்.
இணையத்தில் தற்போது, வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் முன்னணி நடிகர்-நடிகைகள் வெப் தொடர்களுக்கு மாறி வருகிறார்கள்.
அதை தொடர்ந்து, நடிகர் பரத், நடிகைகள் ரம்யநம்பீசன், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் ஏற்கனவே வெப் தொடரில் நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் ‘தலைமைச் செயலகம்’ என்ற வெப் தொடரில் நடித்து இருக்கிறார்கள்.
இந்நிலையில், கிஷோர், ஆதித்யா மேனன் கவிதா பாரதி, தர்ஷா குப்தா, சந்தான பாரதி உள்ளிட்ட மேலும் பலர் இந்த தொடரில் நடித்துள்ளனர்.
இந்த தொடரை தேசிய விருது பெற்ற பட இயக்குனர் வசந்தபாலன் இயற்றியுள்ளார்.மேலும்,ராதிகா சரத்குமார் படத்தினை தயாரித்துள்ளார்.அரசியல் கதையம்சத்தில் உருவாகி உள்ளது.
மேலும், தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் தொடரை பற்றி பேசிய போது, ”தலைமை செயலகம்’ வெப் தொடரை உருவாக்கிய பயணம் போராட்டமாகவே இருந்தது. எனது கணவர் சரத்குமார் உதவி இல்லாமல் இதை செய்து இருக்க முடியாது.அவர் எனக்கு தைரியம் கொடுத்தார். தொடர் சிறப்பாக வந்துள்ளது. தடைகளை தாண்டி பெண்கள் அரசியலில் பங்குபெற வேண்டும்’‘ என்றார்.