ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
திமுகாவின் முன்னாள் தலைவரும்,தமிழக முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் 6 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
இதனையடுத்து திமுக கட்சி தொண்டர்கள் மற்றும் பிரமுகர்கள் பல இடங்களில் அமைதி ஊர்வலத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின்,திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி,அமைச்சர் உதயநிதி ஆகியோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
அதை தொடர்ந்து,சென்னை வாலாஜா சாலையில் இருந்து கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தை நோக்கி,முதல்வர் ஸ்டாலின்,அமைச்சர் உதயநிதி,கனிமொழி போன்ற திமுக முக்கிய பிரமுகர்கள் அமைதி பேரணி நடத்தியுள்ளனர்.