அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தமிழ் புதல்வன் திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு புதுமை பெண் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
இதன்மூலம், அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிர்வதற்க்காக கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதாந்திரம் ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகின்றனர்.
இந்த திட்டத்தின் மூலமாக இதுவரை அரசு பள்ளிகளில் மட்டும் பயின்று சுமார் 3.28 லட்சம் மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், அரசு பள்ளிகளை தொடர்ந்து அரசு உதவி பெரும் பள்ளிகளுக்கு தற்போது இந்த ஆண்டு முதல் இத்திட்டத்தை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
மேலும்,அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தமிழ் புதல்வன் திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்விக்காக கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களின் வங்கி கணக்கில் மாதாந்திரம் 1000 ரூ நேரடியாக செலுத்தப்பட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை அரசு கலைக் கல்லூரியில் இன்று தொடங்கிவைத்தார்.இந்த திட்டத்திற்க்காக ரூ.360 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.