வருகின்ற 2050 ஆம் ஆண்டுக்குள் உலக நாடுகளில் உள்ள சுமார் 570 நகரங்களில் உள்ள சில நிலப்பரப்புகள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக காலநிலை மாற்றம், பனிப்பாறைகள் உருகுதல் போன்றவற்றால் தொடர்ந்து கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
இதனால் வருகின்ற 2040 ஆண்டுக்குள் கடலோர பகுதிகளுக்கும் தண்ணீர் அதிகரிக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் சென்னை நிலப்பரப்பு சும்மார் 7 சதவீதம் கடலுக்குள் மூழ்கும் அபாயம் உள்ளதாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த கடல் மட்ட உயர்வால் சென்னை அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா, தீவு திடல், குடியரசு பொன் விழா நினைவு தூண், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் துறைமுகம் ஆகிய பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் உள்ளது எனவும் சிஎஸ்டிஇபி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்,வருகின்ற 2050 ஆம் ஆண்டுக்குள் உலக நாடுகளில் உள்ள சுமார் 570 நகரங்களில் உள்ள சில நிலப்பரப்புகள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் உள்ளது.
இந்த நகரங்களில் தமிழக தலைநகரான சென்னையும், தூத்துக்குடியில் உள்ள தொழிற்பேட்டைப் பகுதியும் வெள்ளத்தில் சிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1987 முதல் 2021 வரையில் சென்னையில் கடல் மட்டம் 0.679 செ.மீ. உயர்ந்துள்ளது.
அதை தொடர்ந்து,ஒவ்வொரு வருடமும் உயர்வு சுமார் 0.066 செ.மீ. என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
மேலும்,கடந்த 30 ஆண்டுகளில் மும்பையில் தான் அதிகபட்ச கடல்மட்ட உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த செய்தி சென்னை கடலோர பகுதியியல் வசிக்கும் மக்களுக்கு பேரதிர்வை ஏற்படுத்தியுள்ளது.