சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்ததற்கு எதிராக அவரது தாயார் அளித்த மனு மீது தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்.
பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, பெண் காவலர்கள் மீது அவதூராக கருத்து தெரிவித்தது மற்றும் போதை பொருட்களை வைத்திருந்தது போன்ற புகார்களின் அடிப்படையில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், சவுக்கு சங்கரின் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கரின் தாயார் வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த வழக்கில் விசாரித்த இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், மூன்றாவது நீதிபதிக்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
ஆனால், வழக்கை விசாரித்த மூன்றாவது நீதிபதியும் ஆட்கொணர்வு மனுவை இரண்டு நீதிபதிகளை கொண்ட அமர்வு விசாரணை செய்ய வேண்டும் என மீண்டும் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்துள்ளார்.
இதனையடுத்து, சவுக்கு சங்கரின் தாயார் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில் ” தாயார் தன் மகன் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் ”என அதில் தெரிவித்துள்ளார்.
எனவே,உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுதன் துலியா அமர்வில் வந்துள்ளது.
அப்போது பேசிய நீதிபதிகள், “சவுக்கு சங்கர் தடுப்பு காவலில் வைக்கப்படக்கூடிய அளவிற்கு அவர் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தாரா? நீங்கள் மிகக் கடுமையாக அவரிடம் நடந்து கொள்ள முடியாது. சவுக்கு சங்கரின் நடத்தையும் மன்னிக்க முடியாத ஒன்றுதான். இருப்பினும் ஏன் இடைக்கால நிவாரணத்தை வழங்கக் கூடாது?” என தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்புள்ளனர்.
அதை அடுத்து,தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, “அவர் இதுபோன்று செயல்களில் ஈடுபடுவதை வழக்கமாகவே கொண்டுள்ளார். மேலும், தற்போது பெண் போலீஸ் அதிகாரிகள் மீது அவதூறுகளையும, குற்றச்சாட்டுகளை கூறி பேட்டியும் அளித்துள்ளார். அது என்னென்ன வார்த்தைகள் என்பதை இந்த நீதிமன்றத்தில் கூற விரும்பவில்லை” என கூறினார்.
இதனை அடுத்து,சவுக்கு சங்கர் தயார் அளித்த மேல்முறையீடு மனுவுக்கு பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும், இந்த வழக்கு விசாரணைையை உச்ச நீதிமன்றம் வரும் ஜூலை 18ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.