கர்நாடகவின் முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவர் ஆன பி.எஸ்.எடியூரப்பா, இவர் கர்நாடகவில் மூன்று முறை முதல்வராக பதவி வகித்த பெருமைக்குரியவர். எடியூரப்பா தற்போது,17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நேற்று (14/3/2024)அவர் மீது வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் தயார் பெங்களூர் சதாசிவம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் சிறுமியின் தாயார் கூறியதில், “கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி ஒரு உதவிக்காக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை சந்திக்க சென்றேன். அப்போது என் மகளை தனியாக விசாரிக்க அழைத்துச் சென்ற எடியூரப்பா, பாலியல் தொல்லை கொடுத்தும்,அதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என மன்னிப்பும் கேட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, அதை சரிசெய்யும் விதமாக உனக்கு தேவையான உதவிகளை நான் செய்கிறேன்.எனவும்,இங்கு நடந்த விஷயத்தினை வெளியே சொன்னால் நீ பெரிய பிரச்னையை சந்திப்பாய் எனவும் மிரட்டியுள்ளார். என் மகள் ஏற்கெனவே ஒரு பாலியல் கொடுமையில் பாதிக்கப்பட்டவர் எனவும் சிறுமியின் தயார் கூறியுள்ளார்.
மேலும், சிறுமியின் தாய் பல கோடி மோசடி செய்துள்ளதாக வழக்கு ஒன்று உள்ளது.அந்த வழக்கில் தங்கள் மீது தவறில்லை என்பதால், நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என சிறுமியும் அவரின் தாயும் எடியூரப்பாவை பார்க்க சென்றனர். அந்த சமயம் எடியூரப்பா சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.இந்த புகாரின் பேரில்,போக்சோ சட்டப்பிரிவு 8 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 352A ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக எடியூரப்பா கூறியதாவது,
“ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் அச்சிறுமியும் அவரது தாயும் உதவியொன்று கேட்டு என்னை சந்திக்க வந்தனர். அவர்கள் நிலையை அறிந்து சிட்டி கமிஷனர் தயனாந்தாவை ஃபோனில் அழைத்து பேசி உதவிசெய்யும்படி கோரினேன். ஆனால் இப்போது எனக்கே எதிராக பேசுகிறார்கள். அச்சிறுமிக்கு ஏதோ உடல்நலக்கோளாறு இருப்பதாக அறிந்து, போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நானே அவர்களை அனுப்பிவைத்தேன். அவர்கள் மன உளைச்சலில் இருந்ததால் கொஞ்சம் பணம்கூட கொடுத்தேன். ஆனால் இப்போது இப்படி நடந்துள்ளது. என் மீதான எஃப்.ஐ.ஆர் பற்றி அறிந்துள்ளேன். விரைந்து அதன்மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். உதவிசெய்தால் இப்படித்தான் நமக்கு நடக்கும்!” என எடியூரப்பா கூறியுள்ளார்.