படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ‘பிரான்சிஸ் ஸ்காட் கீ’ என்ற பாலத்தின் மீது சரக்கு கப்பல் மோதியதில் பாலம் உடைந்து ஆற்றில் விழுந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள மேரிலாண்ட் மாகாணம் பால்டிமோர் நகரில் படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ‘பிரான்சிஸ் ஸ்காட் கீ’ என்ற பாலத்தின் மீது சரக்கு கப்பல் மோதியதில் பாலம் உடைந்து ஆற்றில் விழுந்துள்ளது.
அப்போது, பாலத்தின் சாலையை பராமரிக்கும் பணி நடந்துகொண்டிருந்தது. பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த மெக்ஸிகோ நாட்டைச் 9 பேரில் 2 பேர் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 6 பேரை அமெரிக்க கடலோரக் காவல்படை 24 மணி நேரம் தேடும் பணிகளில் ஈடுபட்டிருந்தது.
மேலும், நீரின் தட்பவெப்ப நிலை உள்பட பல்வேறு காரணங்களால் பணியாளர்கள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்து மீட்புப் பணிகளை அமெரிக்க கடலோரக் காவல்படை கடந்த 26-ம் தேதி மாலை கைவிடப்பட்டது.
அதை தொடர்ந்து, கடலில் மூழ்கிய டிராக்டரில் இருந்து இருவரின் உடல் மீட்கப்பட்டது என மேரிலாண்ட் மாகாணத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, இருவரும் மெக்சிகோவைச் சேர்ந்த அலெஜான்ட்ரோ ஹெர்னாண்டஸ் புயென்டெஸ் (35) மற்றும் குவாத்தமாலாவைச் சேர்ந்த டோர்லியன் ரோனல் காஸ்டிலோ கப்ரேரா (26) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
எனவே, பால்டிமோர் நகர துறைமுகத்தின் முக்கிய போக்குவரத்து வழித்தடமாக விளங்கும் இந்த ‘பிரான்சிஸ் ஸ்காட் கீ’ பாலம் 1977-ல் திறந்து வைக்கப்பட்டது. 2.6 கி.மீ.தொலைவுக்கு நான்குவழி பாதையாக உருவாக்கப்பட்ட இந்த பாலத்தை ஆண்டுக்கு 1.10 கோடிக்கும் அதிகமான வாகனங்கள் கடந்து செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், முக்கிய போக்குவரத்து வழித்தடமாக விளங்கும் இந்த பாலத்தை சரி செய்யும் பணி திவிரப்படுத்தப்பட்டுள்ளது.