பயிற்சி பெண் மருத்துவர் கொடூரமாக முறையில் கொலை செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை சிபிஐக்கு மாறியுள்ளனர்.
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரங்கேறிய இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள்,பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அனைவரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தின் விளைவாக நாடுகளில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை தவிர அனைத்து மருத்துவ சேவைகளும் தாற்காலியமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பயிற்சி பெண் மருத்துவர் கொடூரமாக முறையில் கொலை செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை சிபிஐக்கு மாறியுள்ளனர்.
இதனையடுத்து,மருத்துவ மாணவி சடலமாக கிடந்த அந்த அறையின் அருகில் இருந்த சிசிடிவி கட்சியை சோத்தித்துப்பார்க்கும் பொழுது அந்த அறையில் இருந்து அதிகாலையில் சஞ்சய் ராய் என்பவர் வெளியில் வந்துள்ளார்.
இந்த நிலையில்,கொலையாளி சஞ்சய் ராயை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாணையில் சஞ்சய் ராய் என்பவர் காவல் தன்னார்வலராக பணிபுரிந்து வந்தாகவும்,இவருக்கு ஏற்கவே நான்கு திருமணங்கள் நடந்துள்ளது என தெரியவந்துள்ளது.
அந்த நான்கு மனைவிகளையும் பாலியல் ரீதியாக சஞ்சய் ராய் கொடுமை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு அவரது நான்காவது மனைவி புற்றுநோயால் பத்திக்கப்பட்டு உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும்,பயிற்சி மருத்துவ மாணவியின் உடற்கூறாய்வு அறிக்கையில் 150 மி கிராம் விந்தணு இருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மருத்துவ மாணவியின் இந்த கொடூர கொலை வழக்கை கொல்கத்தா உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
இந்த வழக்கை இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் , நீதிபதி ஜே.பி.பார்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிப்பதாகவும்,இந்த வழக்கு நாளை (ஆகஸ்ட் 20 தேதி ) விசாரணைக்கு வருவதாகவும் எ.என்.ஐ தெரிவித்துள்ளது.
மேலும்,பெண் மருத்துவரின் வழக்கை விசாரிக்கும் சிபிஐ குழு, கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் 3டி லேசர் மேப்பிங்கை பரிசோதிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும்,பெண் மருத்துவரின் அடையாளத்தை வதந்தி என பரப்பியதாக பாஜக முன்னாள் எம்.பி.லாக்கெட் சாட்டர்ஜி மற்றும் இரண்டு மருத்துவர்களுக்கும் கொல்கத்தா காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அதன்படி அந்த சாமானில் மருத்துவர் குணால் சர்க்கார் மற்றும் மருத்துவர் சுபர்ணா கோஸ்வாமி ஆகியோர் வரும் ஞாயிற்று கிழமை மாலை 3 மணிக்கு கொல்கத்தா வால்பஜாரில் உள்ள காவல்துறை தலைமையகத்தில் அதிகாரிகள் முன்பு ஆஜராகுமாறு குறிப்பிட்டுள்ளது.
அதை தொடர்ந்து,இந்த மூன்று நபர்ககளை தவிர பெண் மருத்துவர் சமபவத்தினை குறித்து தவறான தகவலை வெளியிட்டுள்ளதாக, காவல்துறையினர் 57 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
மேலும்,கொல்கத்தா காவல்துறை ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் தொடர்ந்து ஏழு நாட்களுக்கு ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சுற்றி பாரதிய நாகரீக் சுரேஷு சன்ஹிதா,2023 யின் பிரிவின் கீழ் 163 சட்டத்தின் படி சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்தவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.