மத்தியப்பிரதேசத்தில் அஜித் தற்போது பைக் ரைடிங் ட்ரிப் சென்றுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
பிரபல முன்னணி நடிகர்களின் ஒருவர் அஜித் குமார். இவர் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். கடைசியாக அவர் நடித்த துணிவு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதன் காரணமாக அதே உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் அடுத்த படங்களில் கமிட் ஆகிவருகிறார். அந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயற்றிய மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்குகிறார்.
மேலும்,படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், முதல் பகுதி ஷூட்டிங் தற்போது அஜர்பைஜானில் நடந்து முடிந்துள்ளது. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படி அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகும் அஜித் தற்போது, பைக் ரைடிங் ட்ரிப்பில் தனது நண்பர்களுடன் சென்றிருக்கிறார். அப்பொழுது மத்தியப்பிரதேசத்தில் சக ரைடர்ஸ் நண்பர்கள் உடன் சென்றுள்ள நடிகர் அஜித் இரவு நேரத்தில் தனது நண்பர்களுக்கு பிரியாணி சமைத்து கொடுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி, ரைட்டர் ஒருவருக்கு அஜித் பைக் ஓட்டும் நுணுக்கங்களை கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி,ரசிகர்கள் இடத்தில் நல்ல வரவேற்ப்பும் பெற்று வருகிறது .