போனின் தீவில் அமைந்துள்ள வடக்கு தீவு பகுதிகளில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் இருந்து சுமார் 1000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போனின் தீவு மற்றும் ஓகசாவரா தீவு அமைந்துள்ளது.
இதில் மூன்று முக்கிய தீவு கூட்டங்களை உள்ளாகிய போனின் தீவில் அமைந்துள்ள வடக்கு தீவு பகுதிகளில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதை தொடர்ந்து,நிலநடுக்கம் ஏற்பட்ட அதிர்வு டோக்கியோ வரை உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும்,நிலநடுக்கம் காரணமாக இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.