பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவதை கண்டிக்கும் நோக்கில் போஸ்டர் ஒட்டிய வழக்கறிஞரால் அந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடி, கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்ய உள்ளார்.
இந்நிலையில், மோடியின் தமிழக வருகையை கண்டித்து திமுக வழக்கறிஞர் ஹேமந்த் அண்ணாதுரை என்பவர் ‘Go Back Modi’என போஸ்டர் அடித்து திருவல்லிக்கேணி, பூக்கடை மற்றும் பாரிஸ் கார்னர் ஆகிய பகுதி முழுவதும் ஒட்டியுள்ளார்.
அதில், ”தமிழ் மக்களை இழிவுபடுத்திவிட்டு தமிழ்நாட்டிற்கே வருவதா ? ”என்ற வாசகத்துடன் வழக்கறிஞர் தனது புகைப்படத்துடன் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
அதை தொடர்ந்து, அந்த போஸ்டர்களை மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் கிழித்து அப்புறப்படுத்திய நிலையில், வழக்கறிஞர் அண்ணாதுரையிடம் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவதை கண்டிக்கும் நோக்கில் போஸ்டர் ஒட்டி இருப்பதால் அந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.