மே மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை ஏற்ற இரக்கத்துடன் இருந்து வரும் நிலையில் தற்போது விலை குறைந்துள்ளது.
அதை தொடர்ந்து, நேற்று (மே 3) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்த நிலையில், தற்போது மீண்டும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
இந்நிலையில், 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6,600-க்கும் ஒரு சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.52,800-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
அதன்படி,18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.13 குறைந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,406-க்கும் ஒரு சவரனுக்கு ரூ.104 குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43,248-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதை தொடர்ந்து,வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.86.50-க்கும் ஒரு கிலோ தங்கத்தின் விலை ரூ.86,500-க்கும் விற்பனைசெய்யப்பட்டு வருகிறது.