வீட்டில் தனியாக இருந்த ஐதராபாத்தை சேர்ந்த துணை நடிகையை வலுக்கட்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்த ஆறு பேர் கொண்ட கும்பல் கைது.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர், தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.
கணவருடன் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அவரது உறவினர், வேலை விஷயமாக ஐதராபாத் சென்று விட்டார். இதனால் வீட்டில் துணை நடிகை மட்டும் தனியாக இருந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டுக்குள் 6 பேர் புகுந்தனர். அதில் முருகேசன் என்பவர் வெளியில் 2 பேரை காவலுக்கு நிற்க வைத்துவிட்டு துணை நடிகையை வலுக்கட்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
அதை தொடர்ந்து, வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் துணை நடிகை புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.
இந்நிலையில்,விசாரணைக்கு பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக முருகேசன், கல்யாணகுமார், அருண்பாண்டி, மாரியப்பன், பெரிய நம்பி ராஜ், முப்பிடாதி ஆகிய 6 பேரை போலீசார் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த விசாரணையில் முதற்கட்டமாக,இவர்களில் கைதான முருகேசன் என்பவர், திரைப்பட நடிகர் ஒருவரிடம் கார் டிரைவராக வேலை செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.