ராமநாதபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வழிவிடு முருகன் கோயிலில் மதநல்லிணக்கத்தை போற்றும் விதமாக பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வழிவிடு முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த திருவிழாவை சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் இருந்து பொதுமக்கள் முருகனின் தரிசனம் பெறுவார்கள்.
அதனை தொடர்ந்து , நொச்சிவயல் ஸ்ரீ பிரம்ம புரீஸ்வரர் கோயிலில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடி, வேல் காவடி, பறவை காவடி, சப்பர காவடிகளை எடுத்து பெரியார் நகர், அரண்மனை, வண்டிக்கார தெரு வழியாக ராமநாதபுரம் நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வழி விடு முருகன் ஆலயத்திற்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். தொடர்ந்து அன்றே, பூக்குழி இறங்கும் வைபவம் நடைபெறும்.
மேலும்,நேர்த்திக்கடனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செலுத்துவார்கள். கடந்த ஆண்டில் பங்குனி உத்திர திருவிழாவில் ஒரு இளம் பெண் முருகப்பெருமானுக்கு வேல் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தியதும், நேரத்தில் வெயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அந்த பகுதியில் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர்கள் சாலையில் தண்ணீர் ஊற்றி வேண்டுதல் செலுத்தும் பக்தர்களுக்கு வெப்பத்தை குறைத்து உதவி செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாரு ராமநாதபுரத்தில் மதநல்லிணக்கத்தை போற்றும் விதமாக பங்குனி உத்திர திருவிழா நடத்தப்படுவது குறிபிடத்தக்கது.