வெள்ளித்திரை பிரபலங்களுக்கு எத்தனை ரசிகர் பட்டாளங்கள் உள்ளதோ அதற்கு சமமாக தற்போது யூடுயூப் பிரபலங்களுக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக உள்ளது.
சொல்லப்போனால் வெள்ளித்திரை,சின்னத்திரை பிரபலங்களை விட யூடுயூப் பிரபலங்களுக்கு தற்போது ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.
அந்த வகையில் யூடுயூப் வலைத்தளத்தில் மிகப்பெரிய நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் தான் கோபி மற்றும் சுதாகர்.
இவர்கள் பரிதாபங்கள் என்ற சானலை துவங்கி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர்களாக இவர்கள் வலம் வருகின்றனர்.
இந்த நிலையில் திரைப்படம் எடுப்பதற்க்காக க்ரவுட் ஃபண்டிங் வசூலித்த விவகாரத்தில் சர்ச்சைக்கு ஆளாகினர்.இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் கோபி மற்றும் சுதாகர் பேட்டி ஒன்று அளித்துள்ளனர்.
அந்த பேட்டியில் திரைப்படம் எடுப்பதற்கான பொதுமக்களிடம் க்ரவுட் ஃபண்டிங் வசூலிக்கும் வேலையை இவர்கள் பிரவீன் ஜெயக்கொடி என்பவரிடம் கொடுத்துள்ளனர்.
ஆரம்பத்தில் கணக்கு வழக்குக்களில் சரியாக மேற்கொண்ட பிரவீன் ஜெயக்கொடி,காலப்போக்கில் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களில் பணத்தை பெற்றுக்கொண்டு கோபி மற்றும் சுதாகரிடம் ஏமாற்றியுள்ளார்.
மூன்று ஆண்டுகளில் முப்பது லட்சங்களை மட்டுமே படப்பிட்டிப்புக்கு கொடுத்துவிட்டு பாக்கி பணங்களை இழுத்தடித்துள்ளார்.
இதனையடுத்து இருவருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.இதற்கிடையே அந்த நபர் இது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதால் பிரவின் ஜெயக்கொடி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்க்கு பின்பு தன தங்கள் ஏமாற்ற பட்டது இருவருக்கும் தெரியவந்துள்ளது.இந்த நிலையில், க்ரவுட் ஃபண்டிங் கையாண்டதை தொடர்பாக காவல்துறையில் கோபி மற்றும் சுதாகர் பிரவின் ஜெயக்கொடி மீது புகாரளித்தனர்.
இதனையடுத்து, க்ரவுட் ஃபண்டிங் மூலமாக தங்களுக்கு பணம் கொடுத்து உதவியவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில் தங்கள் பரிதாபம் யூடியூப் சேனலில் வரும் வருமானத்தில் இருந்து சிறுக சிறுக தங்களால் முடிந்த பணத்தை கொடுத்துள்ளானர்.
இந்த நிலையில், பணம் கொடுத்த சிலருக்கு மட்டுமே பணம் திரும்ப கொடுக்கப்பட்ட நிலையில்,கோபி மற்றும் சுதாகரின் நிலையை அறிந்து சிலர் படம் எடுக்க உதவியதாகவும்,சிலர் இதனை நாட்கள் தங்களை சிரிக்க வைத்ததற்காகவும் இந்த பணத்தை பரிசாக இருக்கட்டும் எனவும் சிலர் தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில் தற்போது பரிதாபங்கள் மூலமாக வரும் பணத்தை வைத்து அந்த படத்தினை 90 சதவீதம் எடுத்துள்ளதாகவும் அந்த படத்தின் பணி சில மாதங்களில் முடிந்து விடும் எனவும் கோபி மற்றும் சுதாகர் தெரிவித்துள்ளனர்.