நாடாளுமனற அவையில் எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுனா கார்க்கேவுக்கும் கொடுக்கவேண்டிய மரியாதையை கொடுக்கவில்லை.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.இந்த கூட்டம் தொடங்கிய முதல் கூட்டத்தொடர் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன் பின்னர்,பட்ஜெட் உரை மீதான விவாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெற்று வருகின்றனர்.
மேலும் இந்த கூட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே அவையில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில், மாநிலங்களவையில் எதிர்கட்சி தலைவர்களை பேச வாய்ப்பு அளிக்கவில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதுமட்டுமின்றி,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுனா கார்க்கேவுக்கும் கொடுக்கவேண்டிய மரியாதையை கொடுக்கவில்லை.
அவையில் எதிர்கட்சி தலைவர் ஆளும் கட்சியினர் பேசுவதற்கான வாய்ப்பு அளிக்கவில்லை எனவும்,ஆளும் கட்சியினர் தவறான முறையில் பேசுகின்றனர்.
இதனால் எதிர்கட்சிகள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளோம் என காங்கிரஸ் எம்.பி. ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
அவையில் இருந்து வெளியே வந்த சமாஜவாடி எம்.பி. ஜெயா பச்சன் செய்தியாளர்களிடம் பேசிய போது ” எதிர்கட்சி எம்பி-கள் அவையில் பேசும் பொது மைக் அணைக்கப்படுகிறது.
எதிர்கட்சி பெண் எம்பிகளுக்கு மரியாதையை பழங்கப்படவில்லை.இந்த இழிவான செயலுக்கு அவை தலைவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்”என தெரிவித்தார்.