அமீர்கான் நடிப்பில் தங்கல் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வெளியாகி அனைத்து மொழிகளிலும் பிரபலமானது.
மல்யுத்தம் போட்டிக்கு சிறப்பு வாய்ந்த ஹரியானாவில் பலாலி என்ற ஒரு கிராமத்தில் பிறந்தவர் வினேஷ் போகத்.
இவரது சிறு வயதிலேயே வினேஷின் தந்தை சொத்து தகராறில் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த நிலையில்,தகப்பன் இல்லாமல் தவிக்கும் வினேஷ் போகத் மற்றும் அவரது சகோதரி பிரியங்காவையும் அவரது பெரியப்பாவான மஹாவீர் சிங் வளர்த்துள்ளார்.
நாளடைவில் தனது மகள்கள் பபிதா, ரீத்து, சங்கீதா ஆகிய மூவரும் மல்யுத்தத்திற்கு பழக்கினார்.
அவர்களை தொடர்ந்து தனது சகோதரரின் மகள் பிரியங்கா மற்றும் வினேஷையும் களமிறங்கினர்.
இதனையடுத்து,இந்த பெண்கள் சர்வதேச மல்யுத்த களங்களில் இறக்கி பல பதக்கங்களை வாரி குவித்தனர்.
இதற்காக 2016 ஆம் ஆண்டில் மத்திய அரசு சார்பாக துரோணாச்சாரியார் விருது மஹாவீருக்கு வழங்கப்பட்டது.
இவரின் கதையே அமீர்கான் நடிப்பில் தங்கல் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வெளியாகி அனைத்து மொழிகளிலும் பிரபலமானது.
கடினமான உடல் உழைப்பு கொண்ட மல்யுத்தத்தை பயிற்சி செய்வது ஒருபுறம் எனில், தந்தை இல்லாத சூழலில், கடுமையான மனநெருக்கடியில் வளர்ந்த வினேஷிற்கு சாதிக்கும் வெறி இன்னும் அதிகம் இருந்தது.
அதை தொடர்ந்து,பல போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை கைப்பற்றினார்.
*2013 ஆம் ஆண்டில் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் பதக்கத்தை வென்றார்.
*2018 ஆம் ஆண்டில் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கம் வென்றார்.
*ஆசிய மல்யுத்த போட்டியில் முதல் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.
*உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பல பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.
*2019 உலக விளையாட்டு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமைக்கு
சொந்தக்காரர்.
*வினேஷ் போகத்க்கு 2020 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.
*2023 ஆம் ஆண்டு பாஜக எம்.பி பிரிஜ் புஷன் சிங்கிற்கு எதிராக போராடியவர்களில் இவரும் ஒருவர்.
53 கிலோ எடைபிரிவில் வழக்கமாக போட்டியிடும் வினேஷ், தனது இயல்பான எடையை குறைத்து 50 கிலோ பிரிவில் பாரிஸ் ஒலிம்பிக்கில் போட்டியிட்டார்.
தினேஷ் போகத்தின் பாரிஸ் ஒலிம்பிக் பதக்கம், இத்தனை நாள் வலிகளுக்கு மருந்தாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்த நிலையில்,தற்போது 100 கிராம் எடையில் பதக்கத்தை இழந்திருக்கிறார்.
மல்யுத்த களங்களில் பதக்கங்களை வாரிக்குவித்த இந்த வீராங்கனை சமூகத்தை எதிர்த்தும், அரசியல் கட்டமைப்புகளை எதிர்த்த போதும்தான் வீழ்த்தப்பட்டு இருக்கிறார்.
இப்போது அவர் வீழ்ந்தது சில கிராம்களில் என்றாலும், இந்திய மக்கள் மனங்களில் இன்னும் ஆழமாக நின்றுவிட்டார்