ஜப்பானில் ஐந்து மாகாணங்களில் உள்ள கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் மியாசாகி பகுதியில் இன்று அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கத்தின் 7.1 என்ற ரிக்டர் அளவு பதிவாகியுள்ளது.
அதை தொடர்ந்து ஜப்பானில் நிச்சினனுக்கு வடகிழக்கு பகுதியில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் சும்மார் 25 கிலோ மீட்டர் ஆழத்தில் மய்யம் கொண்டுள்ளதாக அமெரிக்கா புள்ளியில் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த பயங்கர நிலநடுக்கத்தால் மியாசாகி, கொச்சி, ஒய்டா, ககோஷிமா மற்றும் எகிம் ஆகிய மாகாணங்களில் உள்ள கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால்,அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.