இந்திய வீராங்கனை வினேஷ் போகத் எடை 100 கிராம் கூடுதலாக இருந்ததால் அந்த போட்டியில் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் தற்போது பாரிஸ் ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வருகிறது.இதில்,இன்று நடிப்பெற்ற மல்யுத்தபோட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 50 கிலோ எடைப்பிரில் கலந்துகொண்டார்.
தொடர்ந்து,நடைபெற்ற சுற்றுகளில் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.இந்த நிலையில்,இறுதி சுற்றுக்கு முன்னதாக எடை பரிசோதனை நடைபெற்றது.
அப்போது,அவரது உடல் எடை 100 கிராம் கூடுதலாக இருந்ததால் அந்த போட்டியில் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கவே இதற்கு முன்னதாக,கடந்த ஆண்டுகளில் வினேஷ் போகத் 53 எடை பிரிவில் விளையாடினர்.
ஆனால்,ஏற்கவே வேறொருவர் தகுதி பெற்றதால் வினேஷ் போகத் 53 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்க முடியவில்லை.
இந்த நிலையில் 53 எடை பிரிவில் கலந்து கொள்வதற்காக 3 கிலோ எடையை குறைத்து 50 கிலோ பிரிவில் வினேஷ் போகத் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.