கிண்டி சிறுவர் பூங்கா சீரமைக்கும் பணிகள் தற்போது ரூ.30 கோடி செலவில் நடைபெற்று வந்துள்ளது.
சென்னை கிண்டியில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவிற்கு மட்டும் ஒரு ஆண்டுக்கு சுமார் 8 முதல் 9 லட்சம் பேர் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக இந்த பூங்காவிற்கு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஏராளமான மக்கள் வந்து பார்வையிட்டு மகிழ்கின்றனர்.
இந்த நிலையில்,கடந்த சிலமாதங்களா பூங்கா சீரமைக்கும் பணிகள் தற்போது ரூ.30 கோடி செலவில் நடைபெற்று வந்துள்ளது.
இதனை அடுத்து பூங்காவை பொது மக்கள் பயன்பட்டிக்காக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பதற்காக பூங்காவிற்கு வருகை தந்துள்ளார்.
அப்போது,முதலாவதாக வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 9 நவீன வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.
அதை தொடர்ந்து,யானைகள் கணக்கெடுப்பு குறித்த புத்தகத்தை வெளியிட்ட முதல்வர் பின்னர் சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார்.
30 கோடி செலவில் சீரமைக்கப்ட்ட வன உயிரினங்களின் அமைவிடங்கள் மற்றும் காடுகள் இயற்கையாக இருப்பது போன்ற அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக,சிறுவர்களுக்கான நூலகம், விழா அரங்கம், பார்வையாளர்களுக்கான வசதிகள்,பறவைகள், விலங்குகளின் வாழ்வியல் முறைகளை பற்றி அறியும் வசதிகளுடன் உள்ளனர்.