ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை லக்ஷ்யா சென் புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதியில் வெற்றியைப்பெற்ற இந்திய நட்சத்திர வீராங்கனை லக்ஷயா சென்.
இவர் காலிறுதி போட்டியில் சீன தைபே வீரர் சோ டைன் சென் உடன் களம் கண்டார்.
அதை தொடர்ந்து சுவாரசியமாக நடைபெற்ற போட்டியில் சீன வீராங்கனை சோ டைன் சென் (முதல் சுற்று )19-21 என்ற செட் கணக்கில் முதல் சுற்றை வென்றார்.
இதனையடுத்து,நடைபெற்ற இரண்டு சுற்றுகளிலும் இந்திய வீராங்கனை லக்ஷயா சென் (இரண்டாம் சுற்று)21-15, (மூன்றாம் சுற்று )21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இந்த வெற்றி ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக லக்ஷயா சென் மாறியுள்ளார்.