ஒலிம்பிக் போட்டியில் ஹாட்ரிக் பதக்கம் வெல்வார் என எதிர்பார்த்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியை தழுவினார்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் குரூப் சுற்றில் சிறப்பாக விளையாடிய இந்தியா வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.
அந்த சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சீனாவின் பிங் ஜியாயோவை எதிர்கொண்டார்.
ஆட்டத்தொடக்கத்தில் இருவரும் மாறிமாறி புள்ளிகளை எடுத்து ரசிகர்களுக்கு உற்சாகம் கூடியது.
இந்தநிலையில், 21-19, 21-14 என்ற நேர் செட்களில் சீன வீராங்கனை பிங் ஜியாயோ வெற்றி பெற்றனர்.இந்த நிலையில், பி.வி.சிந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.
கடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கத்தையும்,டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் பதக்கத்தை வென்றார்.
இந்த சூழலில்,பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பி.வி.சிந்து ஹாட்ரிக் பதக்கம் வெல்வார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளித்துள்ளது.