மாநிலங்களவை தீர்மானக்கூட்டத்தில் வயநாடு நிலச்சரிவு தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு மத்திய மந்திரி அமித்ஷா பதில் அளித்துள்ளார்.
கேரளாவில் உள்ள வயநாட்டில் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.இதில் அந்த பகுதியில் வசித்துவந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் சிக்கியுள்ளனர்.
இந்தநிலையில் நிலைசரியில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் 2 வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது.
மீட்கும் பணியில் ராணுவம், கடற்படை,தேசிய பேரிடர் மீட்புப்படை, விமானப்படை உள்ளிட்ட அனைத்து படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 168 ஆக உயர்ந்துள்ளது.
இந்தநிலையில், இன்று நடைபெற்ற மாநிலங்களவை தீர்மானக்கூட்டத்தில் வயநாடு நிலச்சரிவு தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு மத்திய மந்திரி அமித்ஷா பதில் அளித்துள்ளார்.
அப்போது பேசிய அமித்ஷா,”தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைவதைக் குறித்து கேரளாம் மாநிலத்திற்கு கடந்த 5 நாட்களுக்கு முன்னதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை மற்றும் நிலச்சரிவு குறித்து கேரளாவிற்கு 2 முறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆனால்,கேரளம் அரசு அதனை பொருட்படுத்தவில்லை.என தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொடுத்த முன் எச்சரிக்கையை கேரளம் அரசு புறம் தள்ளியது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினர்.
நிலச்சரிவு பற்றி முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் தான் தேசிய பேரிடர் மீட்புப்படை முன்கூட்டியே கேரளாவிற்கு சென்றுள்ளது.
இதற்க்கு முன்னதாக குஜராத்தில் சூறாவளி ஏற்பட்டபோது அதை குறித்து 3 நாட்களுக்கு முன்பு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது.
அந்த எச்சரிக்கையை குஜராத் அரசு கவனத்தில் எடுத்து கொண்டதன் மூலம் அந்த சூறாவளியில் ஒரு பசு கூட இறக்கவில்லை.
அதுமட்டுமின்றி,இயற்கை பேரிடர் குறித்து 7 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை வழங்கும் முதன்மையான 4 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக திகழ்கிறது.
அதுமட்டுமின்றி,இயற்கை பேரிடர் முன்னெச்சரிக்கை அமைப்பு சரியாக செயல்பட்டு வருகிறது.
மேலும்,கேரளம் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 90 சதவீதம் தொகையை செலவழிப்பதற்கு மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை எனவும்,கேரளாம் மாநிலத்திற்கு எவ்வித அரசியல் வேறுபாடும் இன்றி மத்திய அரசு துணை நிற்கும் எனவும் தெரிவித்தார்.
மேலும், மத்திய அரசு கொடுக்கும் முன் எச்சரிக்கையை மாநில அரசுகள் தயவுகூர்ந்து படித்து பார்க்க வேண்டும்”எனவும் தெரிவித்துள்ளனர்.