இஸ்ரேலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.
இஸ்ரேல் ராணுவத்தினர் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான மோதல் இது வரை உலக நாடுகளில் இல்லாத அளவிற்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
ஆனாலும்,இஸ்ரேல் ராணுவத்தினர் ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்கும் வரை இந்த தாக்குதலை நிறுத்தும் வாய்ப்பு இல்லை என அதிரடியாக தெரிவித்தது.
இதனையடுத்து, இஸ்ரேலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில்,இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 103 பாலஸ்தீனர்கள் படுகாயங்களுடனும்,குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய ராணுவப்படையினர் நடத்திய இந்த கொடூர தாக்குதலில் இதுவரை 90,589க்கும் மேற்பட்டோர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையிலும்,தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டுவருகின்றனர்.
கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைகளுக்கு இடையிலான சண்டை நடைபெற்று வரும் வருகிறது.
மேலும்,1,200க்கும் மேற்பட்டோர் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகவும், 250க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.