டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி எம்.ஐ.நியூயார்க் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
அமெரிக்காவில் மேஜர் லீக் தொடருக்கான 2-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டு பிளெஸ்சிஸ் தலைமையிலான டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியும், பொல்லார்ட் தலைமையிலான எம்.ஐ. நியூயார்க் அணியும் களம் கண்டனர்.
இந்த ஆட்டத்தில் நியூயார்க் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்நிலையில்,முதலில் பேட்டிங் செய்த கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தலைமையான சூப்பர் கிங்ஸ் அணி பொறுப்பான ஆட்டத்தால் வெளிப்படுத்தியது.
அதன்படி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் அடித்துள்ளனர்.
இந்த ஆட்டத்தில் அதிகபட்சமாக டு பிளெஸ்சிஸ் 61 ரன்களும்,கான்வே 40 ரன்கள் எடுத்தனர்.
இதனையடுத்து, நியூயார்க் அணி 177 ரன்கள் அடித்தால் வெற்றி நோக்கில் களமிறங்கியது.
அதில்,ரஷீத் கான் மற்றும் மோனக் படேலின் அதிரடி ஆட்டத்தால் கடைசி கட்டத்தில் டெக்சாஸ் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தனர்.
இந்நிலையில், 20 ஓவர்களில் நியூயார்க் 7 விக்கெட்டுகளை இழந்து 161 எடுத்துள்ளனர்.
இதில்,டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி எம்.ஐ.நியூயார்க் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
மேலும்,டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் தரப்பில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியது குறிப்பிட்டத்தக்கது.