முதல்வருடன் சென்னை அண்ணா அறிவாலயம் வந்திருந்த அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி தொகுதியில் திமுக எம்.எல்.ஏ புகழேந்தி கடந்த மதம் ஏப்ரல் 6 ஆம் தேதி உயிரிழந்த நிலையில்,விக்கிரவாண்டியில் கடந்த புதன் கிழமை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைப்பெற்றது.
இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பாக அன்னியூர் சிவா,பாமக சார்பாக சி.அன்புமணி ,நாம்தமிழர் கட்சி சார்பாக அபிநயா என மொத்தம் 29 பேர் போட்டியிட்டுள்ளனர்.
இதனையடுத்து,விக்கிரவாண்டி நாடாளுமன்ற தேர்தலில் பதிவாகிய வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்றது.
இந்த தேர்தலின் தொடக்கத்தில் இருந்தே திமுக சார்பில் களம் காணும் வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்துவருக்கிறார்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதலே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 94,992 முன்னிலை வகித்து வந்துள்ளார்.
இதனை கொண்டாடும் விதமாக திமுக தொண்டர்கள் விக்கிரவாண்டி பெரும்பாலான தொகுதிகளில் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
அதை போல,அண்ணா அறிவாலயம் வந்த தி.மு.க. தலைவரும்,முதல்வருமான மு.க.ஸ்டாலின் அங்கு திரண்டிருந்த திமுக தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.
இந்த நிலையில்,முதல்வருடன் சென்னை அண்ணா அறிவாலயம் வந்திருந்த அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து, அமைச்சர் துரைமுருகன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றதன் மகிழ்ச்சியாய் கொண்டாடும் நேரத்தில் திமுகவின் மூத்த தலைவரான துரைமுருகன் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.