டி20 பயிற்சியாளர் ராகுல் டிராவிட்க்கு பதில் புதிய பயிற்சியாளர்களை நியமிக்கும் வேலையில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக நடைபெற்ற 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் பகுதியில் நடைபெற்றது.
இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தன்னுடன் மோதிய தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி கோப்பையை வென்று அசதியுள்ளது.
இதனையடுத்து,நடைபெற்ற 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் இந்த போட்டியுடன் முடிந்துள்ளது.
மேலும், ராகுல் டிராவிட் பணியில் தொடர ஆர்வம் காட்டினாள் தொடர்ந்து அவரே பயிற்சியாளாராக இருக்க முடியும்,ஆனால் அவர் பணியில் தொடர அவர் ஆர்வம் காட்டவில்லை.
இந்நிலையில்,ராகுல் டிராவிட்டை தொடர்ந்து பந்துவீச்சு மற்றும் பேட்டிங் பயிற்சியாளர்களும் ஓய்வு பெற்றுள்ளனர்.
எனவே,அவர்களுக்கு பதில் புதிய பயிற்சியாளர்களை நியமிக்கும் வேலையில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில்,பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்புக்கு முன்னாள் வீரர்கள் ஜாகீர்கான், தமிழகத்தின் எல்.பாலாஜி ஆகியோரை பிசிசிஐ பரிசீலனை செய்வதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
மேலும்,கவுதம் கம்பீர் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவிக்கு வினய்குமாரை பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.