இந்தியன்-2 திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி வர்மக்கலை தலைமை ஆசான் ராஜேந்திரன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் இந்தியன்.28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட இந்த படம் சூப்பர் டூப்பர் வெற்றியை குவித்தது.
இந்தியன் படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார்.இந்நிலையில்,இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகியுள்ள நிலையில்,வரும் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர்,சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், இந்தியன்-2 திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி வர்மக்கலை தலைமை ஆசான் ராஜேந்திரன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதனையடுத்து இந்த வழக்கு நீதிபதி செல்வமகேஸ்வரி முன்பு நேற்று விசாரணைக்கு வந்துள்ளது.
இதனை அடுத்து,நீதிமன்றதில் ஆஜரான இயக்குனர் ஷங்கரின் வக்கீல், இந்த வழக்கு தொடர்பான பதில் மனுவை அளிக்க இரண்டு வாரங்கள் அவகாசம் தர வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதை தொடர்ந்து, இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி, “‘இந்தியன் 2’ படம் வருகிற 12-ந்தேதி திரையிடவுள்ள நிலையில்,விரைவாக பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, விசாரணையை வருகின்ற வியாழன் கிழமை ஒத்திவைத்துள்ளார்.
மேலும் ,நீதிபதி தெரிவிக்கையில் இந்த வழக்கின் நீதியின் நலன் கருதி இந்தியன் படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரண் மற்றும் நடிகர் கமல் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராக வேண்டும் என்று ஆணையிட்டார்.
அப்படி,தயாரிப்பாளர் சுபாஸ்கரன்,நடிகர் கமல் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகாவிட்டால் அவர்கள் தரப்பு வாதங்களை நீதிமன்றம் கேட்காமலேயே உத்தரவு பிறப்பிக்கப்படும்”. என மதுரை மாவட்ட உரிமைகள் நீதிமன்றம் இந்தியன்-2 படக்குழுவினருக்கு எச்சரித்துள்ளது.