சென்னை பெரம்பூரில் தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ப நபர்களால் வெட்டி கொல்லப்பட்டுள்ளார்.
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்.இவர் சென்னை பெரம்பூரில் அவரது புதியதாக கட்டப்பட்ட வீட்டின் முன்பாக நேற்று இரவு 7:30 மணியளவில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டி தப்பி ஒட்டியுள்ளனர்.
இதனையடுத்து,படுகாயம் அடைந்த ஆம்ஸ்ட்ராங்கை அவரது குடும்பத்தினர் மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிக்சை பலனின்றி பரிதாபமாக நேற்று உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இக்கொலை சம்பவத்தை குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த,கொலை சம்பவத்தில் ஈடுபட்டு தப்பி ஒட்டிய குற்றவாளிகளை கைது செய்ய 6 தனிப்படைகளை போலீசார் அமைத்து தேடி வருகின்றனர்.
மேலும்,இச்சம்பவம் நிகழந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் குற்றவாளிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில்,பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் கொண்ட கும்பல் நேற்று காவல்துறையில் சரணடைந்துள்ளனர்.
அதில்,மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக ஆற்காடு சுரேஷின் சகோதரர் ஆற்காடு பாலு உள்பட 8 பேர் அண்ணாநகர் துணை ஆணையர் முன் சரணடைந்தனர்.
தொடர்ந்து, சரணடைந்த 8 பேரையும் கைது செய்த போலீசார் இந்த கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தின் மாநிலக் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும்,மொத்த தமிழகத்தையும் ஒரு குலுக்கு குலுக்கி வருகின்றது.