பள்ளிக்கரணை பகுதியில் அரசு பேருந்து மோதி பணியில் இருந்த தூய்மை பணியாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பள்ளிக்கரணை பகுதியில் உள்ள காமாட்சி மருத்துவமனையின் அருகில் ரேடியல் சாலை அமைந்துள்ளது.
இந்த சாலையை தினம் தோறும் தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வழக்கம் போல் இன்று அதிகாலை தூய்மை பணியில் பாத்திமா என்பவர் துய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது,அந்த பகுதியில் வந்த அரசுப் பேருந்து பாத்திமா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளனர்.
இதனை கண்ட பாத்திமாவுடன் இருந்த சக தூய்மை பணியாளர்கள் உடனே 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸில் உள்ள மருத்துவ உதவியாளர் பாத்திமாவை பரிசோதித்து பார்த்தபோது பாத்திமா, ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளனர்.
அதை தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், தூய்மை பணியாளர் பாத்திமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அரசு பேருந்து மோதி பணியில் இருந்த தூய்மை பணியாளர் உயிரிழந்த சம்பவத்தால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.