சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்கும் பணியில் மண்டலம் வாரியாக ஒரு மண்டலத்திற்கு 5 மாடு பிடி பணியாளர்களை நிர்ணயம் செய்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து பாதிக்கும் அளவிலும் போதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் அளவில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் பொதுமக்களை முட்டும் சம்பவம் அடிக்கடி சமீப காலங்களாக நடைபெற்று வருகிறது.
இந்த சூழலை கட்டுப்படுத்தும் விதமாக சாலையில் திரியும்ளுக்கு சென்னை மாநகராட்சி அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்,சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் மாட்டுத் தொழுவங்களில் அடைக்க திட்டமிட்டுள்ளது.
இதில் , 5, 6, 8, 9 மற்றும் 10 ஆகிய மண்டலங்களில் தலா 5 மாடு பிடி பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கூடுதலாக 1, 2, 3, 4, 7, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய 10 மண்டலங்களில் மாடு பிடிக்கும் பணியில் தலா 5 மாடு பிடிக்கும் பணியாளர்களை தற்காலிகமாக தினக் கூலி பணியாளர்கள் சுய உதவிக் குழுக்கள் மூலம் பணியில் அமர்த்தி சென்னை பெருநகர மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் அரசாணை எண் 36 படி அட்டெண்டர் என்ற பணியில் நிர்ணயித்த குறைந்தபட்ச ஒரு நாள் ஊதியத்தை நபர் ஒருவருக்கு 687 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் பணியாளர் ஒருவருக்கு மாதம் ரூபாய் 20,610 ஊதியமாக வழங்கிடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.