‘சொன்னா புரியாது’ திரைப்பட நடிகர் பிரதீப் கே விஜயன்,சந்தேகத்தின் பேரில்அவரது வீட்டில் சடலமாக கிடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2013 -ம் ஆண்டு,கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில் வெளியான ‘சொன்னா புரியாது’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பிரதீப் கே விஜயன்.
இவர் தெகிடி, வட்டம், டெடி, லிப்ட் போன்ற படங்களில் நடித்துள்ளார் நடிகர் பிரதீப் கே விஜயன்.
அதை தொடர்ந்து, நடிகர் பிரதீப் கே விஜயன் திரைப்படங்களில் வில்லன், நகைச்சுவை நடிகர் என தனது நடிப்பால் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்துள்ளார்.
இந்நிலையில், அவரது திடீர் மரணம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் வசித்து வந்த நடிகர் பிரதீப் கே விஜயன், கடந்த இரண்டு நாட்களாகவிட்டு வீட்டை வெளியே வரவில்லை.
தொடர்ந்து, நண்பர்கள் அவரை தொடர்பு கொள்ள முயன்ற போதும் பிரதீப் விஜயன் செல்போனை எடுக்கததால் அவரது நண்பர்கள் காவல் துறையில் புகாரளித்துள்ளனர்.
புகாரின் பேரில்,காவல்துறையினர் நடிகர் பிரதீப் கே விஜயன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது,வீட்டின் கழிவறையில் தலையில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில்,சடலமாக கிடந்துள்ளார்.
அவரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில்,பிரதீப் கே விஜயன் மாரடைப்பு காரணத்தினால் இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால்,மரணத்திற்கான காரணம் குறித்து இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
அதை தொடர்ந்து, இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.