ஜூன் மாத தொடக்க நாளான இன்று (01.06.24) தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
மே மாதத்தின் கடைசி நாளான நேற்று தங்கம் விலையில் எந்த மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று (01.06.24) விலை குறைந்துள்ளது.
தங்கம் விலை
அதன் படி, இன்று (01.06.24) , 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6,710-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.53,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதை போன்று, 18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்து ஒரு கிராம்தங்கத்தின் விலை ரூ.5,496-க்கும் ஒரு சவரனுக்கு ரூ.136 குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43,968-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
இதை தொடர்ந்து,வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.98-க்கும் ஒரு கிலோ வேல்லியன் விலை ரூ.98,000-க்கும் விற்பனை செய்யப்படு வருகிறது.