சென்னை பூந்தமல்லியில் உள்ள சவிதா கல்லூரியில் எம் பி ஏ படிக்கும் மாணவர்களிடம் ரூபாய்.9 கோடி கட்டணம் மோசடி செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பூந்தமல்லி அருகில் உள்ள வேலப்பன் சாவடி பகுதியில் சவிதா கல்லூரி செய்யப்பட்டு வருகிறது.
இந்த கல்லூரியில் கடந்த ஆண்டு எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்த மாணவரிடம் தலா 3 லச்சம் கட்டணம் ஏற்கனவே கல்லூரி வசூலித்துள்ள நிலையில்,தற்போது கல்லூரி நிர்வாகம் கட்டணம் செலுத்த வில்லை எனவும்,கட்டணம் செலுத்திய ஆதாரங்களை அளித்து விட்டு மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டும் என கடந்த ஒரு மாதங்களாக மாணவர்களிடம் கூறிவந்துள்ளது.
மேலும்,கட்டணம் வசூல் செய்த 2 ஊழியர்கள் தலைமறைவான நிலையில், அவர்களிடம் பணத்தை பெற்று கட்டணத்தை கட்டுமாறு நிர்வாகம் மாணவர்களிடம் கூறியுள்ளது.
இதை தொடர்ந்து மாணவர்கள் ஏற்கவே கட்டணம் செலுத்தி விட்டதாகவும் கட்டணம் செலுத்திய ஆதாரங்களை காட்டியதற்கு இந்த ஆதாரம் செல்லாது எனவும் கல்லூரி நிர்வாகம் தெவித்துள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மாணவர்கள் நேற்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற போது அவர்களை கட்டணம் செலுத்திவிட்டு கல்லூரிக்கு வரவும் என கல்லூரி நிர்வாகம் திரும்ப மாணவர்களை அனுப்பியுள்ளனர்.
இதனால், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், ”நேற்று மாணவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதால் 5க்கும் மேற்பட்ட எம்பிஏ மாணவர்களை கல்லூரி சஸ்பெண்ட் செய்துள்ளனர்”.
கல்வி கட்டணம் குறித்து விசாரணை நடைபெறுவதாக கூறி 5-க்கும் மேற்பட்ட எம்பிஏ மாணவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளதால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.