அக்னி நட்சத்திரம் தொடங்கும் நிலையில்,கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை குறித்து தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி கூறியுள்ளார்.
திருப்பதியில் உள்ள திருப்பதி தேவஸ்தான நிர்வாக கட்டிடத்தில் டயர் யுவர் இ ஓ நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டியிடம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பக்தர்கள் கேள்விகள் கேட்டுள்ளனர்.
அந்த கேள்விகளுக்கு தேவஸ்தான நிர்வாக அதிகாரி பதிலளித்துள்ளார்.அப்போது திருமலை தேவஸ்தானம் வழங்கும் தரிசனம், தங்குமிடம், உணவு மற்றும் இதர வசதிகள் சிறப்பாக இருப்பதாக பாராட்டினர்.
அதை தொடர்ந்து, இன்று அக்னி நட்சத்திரம் தொடங்கும் நிலையில்,கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை குறித்து தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி கூறியுள்ளார்.
அப்போது, பேசிய தேவஸ்தான அதிகாரி, ”கோடைகால விடுமுறையில் திருமலை தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு எந்த விதத்திலும் இடையூறு ஏற்படாத வகையில் பல ஏற்பாடுகள் செய்துள்ளோம். இந்நிலையில் உணவு, மோர், குடிநீர், காலை உணவு மற்றும் மருத்துவ வசதிகள் பக்தர்களுக்கு வழங்கப்படும். கோவில் வீதிகளில், பக்தர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள் வெயிலின் உஷ்ணத்தை போக்கும் வகையில்,பந்தல்கள் , கூல் பெயின்டிங் மற்றும் கார்பெட்டுகள் அமைக்கப்பட்டிருக்கிறது”என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,”நாங்கள் அவ்வப்போது தண்ணீரை தரையில் தெளிக்கிறோம்.நாராயணகிரி தோட்டங்கள் மற்றும் கோவில் சுற்றுப்புறங்களில் பக்தர்கள் ஓய்வெடுக்க தற்காலிக கொட்டகைகள் அமைத்துளோம்.திருமலையில் ஆகாசகங்கா ஸ்ரீ பாலஞ்சநேயசுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா வரும் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை ஐந்து நாட்கள் சிறப்பாக நடைபெறும்.மேலும், அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆகாஷ் கங்கையில் உள்ள ஸ்ரீ பழஞ்சநேயசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெறும்” டயர் யுவர் இ ஓ நிகழ்ச்சியில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி பக்தர்களிடம் கூறியுள்ளார்.