வைகை ஆற்றில் இறங்குவதற்காக அழகர் மலையில் இருந்து மதுரைக்கு வந்த கள்ளழகர், மீண்டும் அழகர் மலைக்கு திரும்பி செல்வதற்கு முன்னதாக பூ பல்லக்கில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
உலக புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் கடைசி நிகழ்வான கள்ளழகர் பூ பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.
மதுரை தல்லாகுளம் பகுதியில் தமுக்கம் மைதானத்தின் அருகில் உள்ள கருப்பண்ணசாமி கோவிலுக்கு எதிரில் கள்ளழகர் எழுந்தருளினார்.
இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கள்ளழகரின் தரிசனம் பெற்றனர்.
இதற்கு முன்னதாக அழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்க்காக அழகர் மலையில் இருந்து மதுரையை நோக்கி புறப்பட்டார்.
கள்ளழகர் மதுரை மாநகரத்துக்குள் நுழையும் போது எதிர்சேவை செய்து பொதுமக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
அதை தொடர்ந்து,கள்ளழகர் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வைகை ஆற்றில் இறங்கினர்.
மேலும், இதை தொடர்ந்து,கள்ளழகர் பக்தர்களுக்கு தசாவதார காட்சி அளித்தபின்னர், அழகர்மலைக்கு திரும்பி செல்லும் நிகழ்வுக்கு முன்னதாக பூ பல்லாக்கு நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் நேற்று இரவில் இருந்து காத்திருந்த நிலையில்,இன்று காலை கள்ளழகரின் தரிசனம் பெற்று சென்றனர்.
இந்நிலையில், பூப்பல்லக்கில் அழகர் காட்சி அளித்த நிகழ்வால் அப்பகுதியே மக்கள் வெள்ளத்தில் காணப்பட்டது.