திருவிழாவில் ஊர்வலத்தின் போது தனது தங்கை மற்றும்தாய் கண் முன்னே இளைஞரை வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி உருளையன்பேட்டை பகுதியில் தாய் மற்றும் தங்கையுடன் வசித்து வருபவர் உத்ரேஷ்(28).இவர் அப்பகுதியில் உள்ள கங்கை முத்து மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற பால்குட திருவிழாவில் ஏராளனமான பக்தர்கள் கலந்து கொண்டு தனது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
அப்போது, உத்ரேஷ் தனது தங்கை மற்றும் தாயுடன் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வேண்டுதல் செய்து கொண்டிருந்தனர். அந்த சமயம் கோவிலின் அருகில் ஊர்வலம் வந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை வைத்து உத்ரேஷை அவரது தங்கை மற்றும் அவரது தாய் கண் முன்னே சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து மூவரும் தப்பிச்சென்றனர்.
இதில், படுகாயம் அடைந்த உத்ரேஷை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த,மருத்துவர் ஏற்கனவே உத்ரேஷ் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
அதை தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உருளையன்பேட்டை காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் போது கொலைசெய்யப்பட்ட உத்ரேஷ் மீது கஞ்சா ,அடிதடி போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.
மேலும், விசாரணையில் இந்த சம்பவம் முன் விரோதம் காரணமாக நடந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
இதனால், அந்த பகுதியில் கோவில் திருவிழாவில் வேண்டுதல் செய்திருந்த இளைஞரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.