மதுரையில் மல்லிகை,ஜிகர்தண்டா போன்ற பல்வேறு சிறப்புகள் இருக்கிறது .ஆனால் மதுரைக்கே அடையாளம் என்பது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தான். சித்திரை தொடங்கினாள் போதும், மதுரையே அந்த மாதம் முழுவதும் மகிழ்ச்சியில் பொங்கும்.
அந்த நிலையில் தற்போது, மதுரை பகுதியில் பங்குனி உத்திர திருவிழா கோலாவலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சித்திரை திருவிழாவிற்கு இன்னும் இரண்டு வரமே உள்ள நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் உப கோவிலான மதுரை வண்டியூர் மாரியம்மன் கோவிலில் பங்கு உத்திர திருவிழா தொடங்கி,10 நாட்கள் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தப் பத்து நாள் திருவிழாவிழும் மதுரை மாரியம்மன் மயில் வாகனம், அன்ன வாகனம், சிம்ம வாகனம், ரிஷப வாகனம், தங்க குதிரை வாகனம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி தினமும் தெப்பக்குளத்தை சுற்றி மக்களுக்கு காட்சி அளித்து, பின்பு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பங்குனி உத்திர திருவிழாவில் சிறப்பு வாய்ந்த விழாவில் எட்டாம் நாளின் நேற்று (ஏப்ரல் 7) பூ பல்லாக்கு நடைபெற்றது.
சுமார் 10:30 மணியளவில் மல்லிகை மற்றும் மற்ற பூக்களால் அலங்கரிக்கப்பட்டு,பச்சை நிற பட்டு உடுத்தி, நகைகளால் அலங்காரம் செய்து கொண்டு,மாரியம்மன் பல்லக்கில் எழுந்தருளி பின்பு தெப்பக்குளத்தை சுற்றி வலம் வந்து மக்களுக்கு காட்சி அளித்தார்.
வண்டியூர் மாரியம்மன் மல்லிகை பூவால் அலங்கரிக்கப்பட்ட, பூ பல்லக்கில் பவனி வரும் காட்சியை காண்பதற்காக திரளான பக்தர்கள் தெப்பக்குளம் பகுதியில் கூடி, கண் குளிர மாரியம்மனை தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.