பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் தரகர் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் பள்ளி மாணவிகளை வைத்து பாலியல் தொழில் நடத்திவருவதாக காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோருக்கு சென்னை மாவட்ட குழந்தைகள் நலக் குழு மூலம் புகார் வந்ததுள்ளது. இந்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் செல்வராணி தலைமைபிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், ரகசிய தகவலின் பேரில் காவல்துறையினர் வளசரவாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.தொடர்ந்து அந்த வீட்டில் இருந்த மேற்கு சைதாப்பேட்டையை சேர்ந்த 70 வயது முதியவரிடம் விசாரணை செய்தனர்.அவர் அளித்த வாக்குமூலத்தின் பேரில், இன்னொரு பகுதியை சேர்ந்த பெண் தரகர் மற்றும் அவரது சகோதரியை அழைத்து போலீசார் விசாரணை செய்தனர்.
அந்த விசாரணையில்,பெண் தரகரின் மகள் தற்போது 12 ஆம் வகுப்பு படிக்கும் நிலையில், அவருடன் படிக்கும் வறுமையில் உள்ள மாணவிகள், தனித்து வாழும் பெண்களின் மகள்களை குறிவைத்து இந்த கும்பல் வலைவீசியுள்ளது.
அதுமட்டுமின்றி, படித்துக்கொண்டே பகுதிநேர வேலை செய்யும் மாணவிகளையும் சம்பாதிக்கும் ஆசை காட்டி அவர்களது செலவுக்கு 500, ஆயிரம் ரூபாய் என பணம் கொடுத்து இந்த பெண்மணி தனது வலைக்குள் மாணவிகளை கொண்டுவந்தது போன்ற,உள்ளிட்ட திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதையடுத்து, விபச்சார தடுப்புப் பிரிவில், குழந்தைகள் நலக்குழு அதிகாரி பாலகுமார் அளித்த புகாரில் 70 வயது நபர் உட்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 7 செல்போன்கள், ஒரு சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து, இந்த கும்பலால் பள்ளி மாணவிகள் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என ரகசியமாக பட்டியலிட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.