சீனாவில் உள்ள 900 வீடுகளும், 1,345 சாலைகள் முழுவதும் மழை நீரில் மூழ்கி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளனர்.
சீனாவின் மையப் பகுதியாக அமைந்துள்ளள ஹுனான் மாகாணத்தில் கனமழை பெய்து வருகின்றனர்.
இந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள 900 வீடுகளும், 1,345 சாலைகளும் சாலைகள் முழுவதும் மழை நீரில் மூழ்கி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் 5,400 மீட்பு குழுவினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 7 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 3 பேரை தேடும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சீனாவின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசி வந்த போதிலும், சில பகுதிகளில் கனமழை பெய்து வந்தது.
இந்த நிலையில், சீனாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 645 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த வாரம் ஞாயிற்று கிழமை திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.