தனியார் பாரில் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் வடமாநிலத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும், 2வரை தேடும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலை அருகே இருக்கக்கூடிய சேவியர் சாலையில், செக்மேட் என்ற மதுபான கடை மற்றும் கிளப்புடன் கூடிய பாப் செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் மதுபான பாரில் ஏராளமான வடமாநிலம் மற்றும் மணிப்பூரையும் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று மலை 7 மணி அளவில் பார் செயல்பட்டுக்கொண்டிருந்தனர். அந்த சமயம் பாரின் முதல் தளத்தின் ஒரு பாதி இடிந்து விழுந்துள்ளது. அந்த நேரத்தில் வேளையில் இருந்த 5 க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் அந்த விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் மாற்றும் இரண்டு தீயணைப்பு வாகனத்தில் வந்த வீரர்கள் தொழிலாளர்களை மீட்க்கும் பணியில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து, ஜேசிபி வாகனம் உதவியோடு இடிபாடுகளை அப்புறப்படுத்தினர்.
அந்த இடிபாடுகள் நடுவில் மூன்று தொழிலாளர்கள் சிக்கி உயிரிழந்தநிலையில் இருந்தனர். மேலும், இருவரை தேடும் பணிகள் தீவிரமாக தடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அபிராமபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த மூன்று பேரும் அந்த மதுபான விடுதியில் வேலை செய்தவர்கள் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தனியார் மதுபான விடுதி மேற்கூரை விழுந்ததற்கு அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ பணிகள் தான் காரணம் என கூறப்பட்ட நிலையில், அதனை மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுத்துள்ளது.
மேலும், விபத்து குறித்து பேசியிருக்கும் மெட்ரோ ரயில் நிர்வாகம், “ஆழ்வார்பேட்டை மதுபான விடுதி விபத்துக்கு மெட்ரோ பணிகள் காரணமில்லை. விபத்து நடந்த பகுதியிலிருந்து 240 அடி தொலைவில் தான் பணிகள் நடந்துவருகிறது” என்று விளக்கமளித்துள்ளது.