பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து அந்த பகுதியே வெள்ளக்காடாக மாறியுள்ளது.
சீனாவின் தெற்கு கடல் பகுதியில் காற்றெழுத்த தாழ்வுமண்டலம் ஏற்பட்டு புயலாக வலுப்பெற்றுள்ளது. கெமி என பெயரிடப்பட்ட இந்த புயல் தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டின் அருகே மையம் கொண்டுள்ளது.
புயலின் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் பலத்த கனமழை பெய்து வருகிறது .இதனால் அந்த நாட்டில் உள்ள கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து அந்த பகுதியே வெள்ளக்காடாக மாறியுள்ளது.
இதில் சிக்கியுள்ள மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் வேரோடு பிடிங்கிய நிலையில் காணப்படுகின்றனர்.இந்த சூழலில் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள பள்ளி,கல்லூரிகள் மற்றும் போக்குவரத்து முடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து,கடலோர பகுதியில் வசிக்கு 6 லட்சம் மக்களை பாதுகாப்பாக மீட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளது.
மேலும்,அந்த நாட்டு பேரிடர் மீட்பு படையினர் பாதிக்கப்பட்டவர்களை படகுகள் மூலம் மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெள்ளத்தில் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,சிலரை தேடும் பணிகள் நடந்து கொண்டிருப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளனர்.